திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் பகுதியை சேர்ந்தவர் பிரபல யுனானி மருத்துவர் அக்பர் கௌசர். இவருக்கு சாந்தி நகர் பகுதியில் சுமார் 2 அரை ஏக்கர் விவசாய நிலத்தில் மூங்கில் மரங்கள் மற்றும் காசினி கீரை செடிகளை வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில் மூங்கில் தோட்டத்தில் மர்ம நபர்கள் தீ வைத்து சென்றுள்ளனர். தீ மளமளவென பரவியதை தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தண்ணீர் பீச்சி அடித்து குமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இருப்பினும் சுமார் 100 க்கும் மேற்பட்ட மூங்கில் மரங்கள் மற்றும் காசினி கீரை உள்ளிட்டவை தீயில் கருகி நாசமானது. சமூகம் குறித்து நகர போலீச வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.