நாளை நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் வாக்கு பதிவை முன்னிட்டு மதுபான கடைகளை அடைக்க உத்தரவிட்டுள்ள நிலையில் திண்டுக்கல் நகர் பகுதி , வடமதுரை, செங்குறிச்சி, ராஜக்காபட்டி, சிறுமலை பிரிவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கள்ள சந்தையில் மது விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது .
தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ள நிலையில் அரசு உத்தரவை மதிக்காமல் கள்ள சந்தை மதுவிற்பனை நடைபெறுவது சம்மந்தபட்ட காவல் துறை அதிகாரிகள் , தேர்தல் பறக்கும் படையினருக்கு தெரியாதா என்றும் இந்த மதுபாட்டில்கள் எப்படி வந்தது அல்லது போலி மதுபானமாக இருக்கலாம் எனவும் சமூக ஆர்வங்கள் சந்தேகமாக கூறுகின்றனர்
கூடுதல் விலைக்கு விற்பனை
கண்டுகொள்ளாத மதுவிலக்கு போலீசார்