இன்று காலை 11:30 மணி அளவில் திண்டுக்கல் YMR பட்டி கென்னடி ஆரம்பப் பள்ளி 256 வது வாக்குச்சாவடியில் வாக்களிக்க சென்ற திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் தனபால் க்கு வரிசையில் நின்றிருந்த பொதுமக்கள் வணக்கம் தெரிவித்தார்கள் பதிலுக்கு அவரும் அவர்களுக்கு வணக்கம் தெரிவித்த நிலையில் அங்கு பணியில்
இருந்த திண்டுக்கல் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் நாகராஜன் அவரிடம் பொதுமக்களுக்கு ஏன் வணக்கம் தெரிவிக்கிறீர்கள் இங்கு யாருக்கும் வணக்கம் தெரிவிக்க கூடாது என கூறியதால் நான் இந்த வார்டின் கவுன்சிலர் அதனால் இப்பகுதி மக்கள் வணக்கம் கூறினர் நானும் மரியாதை நிமித்தமாக பதில் வணக்கம் கூறினேன் என கூறினார்.
அதை DSP நாகராஜன் ஏற்றுக் கொள்ளாததால் வாக்குவாதமாக மாறியதால் சக காவல்துறையினரும் , பாஜக நிர்வாகிகளும் சமாதன படுத்தினர் . இதனால் சிறிது நேரம் பரபரப்பாக இருந்தது .