திண்டுக்கல் பஸ்ஸ்டாண்டில் பாலிதீன் பயன்பாட்டை ஒழிக்க தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட மீண்டும் மஞ்சள் துணி பை தானியங்கி இயந்திரம் வேலை செய்யததால் பொதுமக்கள் ஏமாற்றம்
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், பஸ்ஸ்டாண்ட்களிலும் தமிழக அரசின் மீண்டும் மஞ்சள் பை திட்டத்தில் தனியாக நிதி ஒதுக்கி தானியங்கி இயந்திரம் அமைக்கப் பட்டது.
பாலிதீன் ஒழிப்பை முன்னிறுத்தி செயல்படுத்தப்பட்ட இத்திட்டத்தில் ரூ.10 நாணயத்தை இயந்திரத்திற்குள் செலுத்தினால் மஞ்சள் துணி பை தானாகவே கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் தானியங்கி மஞ்சள் பை இயந்திரம் பல நாட்களாக செயல்படாததால் பொதுமக்களில் பலர் மஞ்சள் பையை பெற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
மக்கள் வரிப்பணத்தில் வாங்கி மக்களின் பயன்பாட்டுக்காக வைக்கப்பட்ட இயந்திரம் உரிய பராமரிப்பின்றி மக்களால் பயன்படுத்த முடியாமல் காட்சி பொருளாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர் .
மேலும் இந்த இயந்திரத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் , பேருந்து நிலையத்தில் மேலும் சில இடங்களில் துணிப்பை வழங்கும் இயந்திரங்களை நிறுவி பாலித்தீன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் முயற்சியில் ஒரு முக்கிய செயல்பாடாக இது இருக்கும் எனவும் கூறினர் .