Featuredஅரசியல்கோக்கு மாக்குக்ரைம்சுற்றுலாசெய்திகள்விமர்சனங்கள்
Trending

மிச்சம் மீதி இருக்கிற மரங்களையும் அழிப்போம். மிகச் சிறப்பான வெயிலைப் பெறுவோம் 🌞🌞 – சமூக ஆர்வலர்கள் சமூக வலைதள பதிவு

தமிழகத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி சுட்டெரித்த வெயில்:

ஈரோடு – 109°F
சேலம் – 107°F
வேலூர் – 106°F
தருமபுரி – 106°F
கரூ‌ர் பரமத்தி – 106°F
திருப்பத்தூர் – 105°F
திருத்தணி – 105°F
மதுரை – 105°F
திருச்சி – 104°F
மதுரை நகரம் – 104°F
கோவை – 104°F
நாமக்கல் – 104°F
பாளையங்கோட்டை – 102°F
தஞ்சாவூர் – 102°F

இந்த அளவிற்கு வெயில் வாட்டி வதைப்பதற்கான சில காரணங்களாக

சாலையோர மரங்கள் : தமிழகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக சாலை அகலபடுத்தும் பணிக்காக சாலை ஓரங்களில் பல ஆண்டுகளாக இருந்த மரங்கள் அனைத்தும் வெட்டப்பட்டு சாலை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன . ஒரே நேரத்தில் மொத்தமாக மரங்கள் வெட்டப்படுவதால் அந்த பகுதிகளின் தட்ப வெப்பநிலை மாறுபடுகிறது .

காட்டு தீ : வனப்பகுதிகளில் மனிதர்களின் அலட்சியம் மற்றும் ஆடு மாடு மேய்ச்சல் , சிகரெட் துண்டுகளை வீசி எறிவதால் ஏற்படுகிறது இதனால் மலை பகுதிகளில் பெரும் பகுதி அழிந்து தப்ப வெப்ப மாறுபாடு ஏற்படுகின்றது .

வனபதியில் குப்பைகள் : வனப்பகுதிகளில் சுற்றுலா பயணிகளால் வீசி எறியப்படும் பாலித்தீன் பொருட்கள் , மது பிரியர்களால் வீசப்படும் கண்ணாடி பாட்டில்கள் பிளாஸ்டிக் கழிவுகளாால் வனம் , வன உயிரினங்கள் பாதிப்படைவது மட்டுமின்றி வனப்பகுதி தாவர பெருக்கம் பெருமளவில் பாதிப்படைகின்றது

முறைகேடான கட்டிடங்கள் : மலை பகுதிகளில் முறைகேடாக கட்டிடங்கள் கட்ட பெருமளவு மரங்கள் மற்றும் தாவரங்கள் அழிக்கப்படுகிறது .

JCB , HITTACHI வாகன பயன்பாடு: மலைபகுதிகளில் மொத்தமாக அழிக்கும் வகையில் ஆக்கிரமிப்பு இடங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் எவ்வித முறையான அனுமதியும் இல்லாமல் சம்மந்தபட்ட அதிகாரிகளின் ஆதரவுடன் JCB கிட்டாச்சி வாகனங்களை கொண்டு சுத்தம செய்வதாக கூறி மரங்களை வேரோடு சாய்த்து அனைத்து வகை மலை தாவரங்களையும் அழித்தல்

மரக்கடத்தல் : உரிய அனுமதியின்றி (அ) அனுமதிக்கபட்ட அளவுக்கும் அதிகமாக (அ) அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு அருகில் உள்ள அரசு , வன இடங்களில் உள்ள இடங்களில் உள்ள மரங்களையும் சேர்த்து வெட்டி கடத்துதல்

இது போன்ற பல்வேறு காரணங்களினால் தற்போது புவி வெப்பமயமாதல் / தட்ப வெப்ப நிலை மாற்றங்கள் ஏற்பட்டு அதன் ஒரு பகுதியாக வெயில் சுட்டெறிக்கின்றது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

சமீபமாக இயற்கை ஆர்வலர்கள்

மிச்சம் மீதி இருக்கிற மரங்களையும் அழிப்போம். மிகச் சிறப்பான வெயிலைப் பெறுவோம் 🌞🌞 என சமூக வலைதளங்களில் டிரெண்டிங் செய்துவருகின்றனர்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button