வாணியம்பாடி அடுத்த ஆலங்காயத்தில் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற இளைஞரை கம்பத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
வாணியம்பாடி, ஏப்.24- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மிட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதா. இவர் தனது இருசக்கர வாகனத்தில் ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலகதிற்கு வேலையாக சென்றுள்ளார்.அங்கே பணியை முடித்து கொண்டு அருகில் உள்ள டீ கடை முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு ஹோட்டலுக்குள் சென்றுள்ளார்.அப்போது அங்கு வந்த 2 இளைஞர்கள் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றுள்ளனர்.இதனை பார்த்த அந்த பெண் கூச்சலிடவே அங்கிருந்தவர்கள் இரு சக்கர வாகனம் மூலம் சுமார் 5 கிமீ தூரம் துரத்தி சென்று நிம்மியம்பட்டு பகுதியில் பொதுமக்கள் உதவியுடன் இருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற இளைஞர்களை மடிக்கி பிடிக்க முயன்ற போது அதில் ஒருவர் தப்பி ஓடியுள்ளான். மற்றொரு இளைஞரான வளையாம்பட்டு, ராஜீவ் காந்தி நகர் பகுதியை சேர்ந்த உதயன்(25) என்பவரை பிடித்து அங்குள்ள ஒரு கம்பத்தில் கட்டி வைத்து ஆலங்காயம் போலீசாரை வரவழைத்து ஒப்படைத்தனர்.
ஒப்படைக்கப்பட்ட இளைஞரை போலீசார் ஆலங்காயம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.