செம்பட்டி அருகே போடிகாமன்வாடி கிராமத்தைச் சேர்ந்த, அரசு பள்ளி மாணவர் விடுதி சமையலர் உட்பட இரண்டு பேர், சாலை விபத்தில் சம்பவ இடத்தில் பலியானார்கள்.
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே போடிகாமன்வாடி கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (47) இவர், வத்தலகுண்டு அடுத்த, விருவீடு அரசு மாணவர் விடுதியில் சமையலராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், தற்போது இவரது உறவினர் செம்பட்டி அருகே வீரக்கல் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி (47) ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில், வத்தலகுண்டு சாலை வழியாக போடிகாமன்வாடி சென்று கொண்டிருந்தனர். அப்போது, திண்டுக்கலில் இருந்து வத்தலகுண்டு நோக்கிச் சென்ற, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கார் அவர்கள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட போது, வத்தலகுண்டுவில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற கார் அவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்தில் ராமகிருஷ்ணன் மற்றும் அவரது உறவினர் சுப்பிரமணி ஆகிய இருவரும் பலியானார்கள். இதுகுறித்து, செம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தி : கதிரேசன் , மாவட்ட செய்தியாளர்