கோவை வனச்சரக எல்லைக்குட்பட்ட வடவள்ளி பகுதியில் சட்டவிரோதமாக யானை தந்தம் விற்க முயற்சி செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கோவை வனச்சரக அலுவலர் தலைமையில் கோவை வனச்சரக பணியாளர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சாய்பாபாகாலனி பகுதியைச் சேர்ந்த விசாகன்(வயது-40) த/பெ பாலகுமார், நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன்(வயது-40), வடவள்ளி பகுதியைச் சேர்ந்த பிரிட்டோ த/பெ. ஜெயராஜ் (வயது-43) மற்றும் செல்வராஜ்(வயது-38) த/பெ. சங்கர் ஆகியோர் யானை தந்தத்தை சட்டவிரோதமாக விற்க முயற்சி செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
01.05.2024 ஆம் தேதி காலை சுமார் 9.00 மணியளவில் விற்பணைக்காக பயன்படுத்தப்பட்ட யானை தந்தம் ஒன்று கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து வடவள்ளி பகுதியைச் சேர்ந்த பிரிட்டோ மற்றும் செல்வராஜ் ஆகிய இருவரையும் கைது செய்த வனத்துரையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து அவர்கள் இருவரும் நிபந்தனையுடன் கூடிய ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
மேலும் யானை தந்தமானது சாய்பாபாகாலனி பகுதியைச் சேர்ந்த விசாகன் என்பவரது வீட்டில் வைத்திருந்ததாகவும் அதனை சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயற்சி செய்ததாகவும் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் அவர்கள், கோவை அவர்களின் உத்தரவின்படி தலைமறைவான மேலும் இருவரை தனிக்குழு அமைத்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.