அரசியல்ஆன்மீகம்க்ரைம்செய்திகள்விமர்சனங்கள்
Trending

பாலித்தீன் கழிவுகளை உண்ணும் மான்கள்

திருவண்ணாமலை தமிழகத்தில் உள்ள ஆன்மீக தலங்களில் இந்திய அளவில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஸ்தலமாகும்.

இங்கு தினமும் பல ஆயிரம் பக்தர்கள் வந்து செல்கின்றனர் . மேலும் இந்து மத கோட்பாட்டின் முக்கிய தினங்களில் (முக்கியமாக சிவராத்திரி அன்று) பல லட்சம் மக்கள் வந்து திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர்கோவில் அமைந்துள்ள மலையை சுற்றி கிரிவலம் வருவது பெரும் பாக்கியமாக கருதி வருகின்றனர் .

இது போன்று வரும் பக்தர்களுக்கு பல்வேறு இடங்களில் அன்னதானம் உட்பட பல்வேறு வசதிகள் அரசு , தன்னார்வ , மடம் ஆகியவைகள் ஏற்பாடு செய்து கொடுத்து வருகின்றன .

இந்நிலையில் பக்தர்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பாட்டில்களில் வரும் குளிர்பானங்கள் , தண்ணீர் மற்றும் பாலித்தீன் பைகளில் அடைக்கப்பட்ட தின்பண்டங்கள் தீர்ந்த உடன் அதற்கென வைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் போடாமல் ஆங்காங்கே வீசி செல்கின்றனர் .

இதனால் சுகாதார கேடு ஏற்படுவது மட்டுமின்றி சாலையோர விலங்குகள் மற்றும் வன உயிரினங்கள் இவற்றை அவற்றிற்கான உணவு என நினைத்து உண்கின்றன .

இதனால் சாலையோர மற்றும் வன விலங்குகள் நோய் வாய் பட்டு இறந்து வருவது சமீபத்தில் அதிகரித்து வருகிறது. தற்போது இவ்வாறு போடப்பட்ட பாலித்தீன் , பிளாஸ்டிக் கழிவுகளை தேடி கூட்டம் கூட்டமாக மான்கள் வந்து சாப்பிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் பேசும் நபர் கிரிவல பாதையில் உள்ள எமதர்மர் ஆலயம் எதிரில் இந்த காட்சி படமாக்கப்பட்டதாக கூறுகின்றார் .
இதை தொடர்ந்து சமூக மற்றும் வன உயரின ஆர்வலர்கள் சம்மந்தபட்ட துறைகள் ஒருங்கிணைந்து கிரிவல பாதையில் பாலித்தீன் , பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகாமல் தடுத்திடவும் வன உயரினங்களுக்கு தேவையான உணவு , தண்ணீர் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button