தென்காசி அருள்மிகு ஶ்ரீ காசிவிஸ்வநாதர் சமேத உலகம்மன் திருக்கோயில் தெப்பக்குளம் சுற்றுச் சுவர் அருகில் சமூக விரோதிகளால் தினமும் மது பாட்டில்கள் மற்றும் தண்ணீர் கேன்கள், நெகிழிகள் அனைத்தும் கொட்டப்பட்டு வருகிறது. அதே இடத்தில் குடித்து விட்டு சிறுநீர் கழிக்கவும் சமூக விரோதிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
கோவில் நிர்வாகம் கடுகளவும் கண்டுக் கொள்வதில்லை. தென்காசி நகராட்சி சுகாதார ஆய்வாளர் அவர்களும் குப்பைகளை அகற்ற முன்வரவில்லை என அப்பகுதியினர் குற்றசாட்டு .
ம்மந்தபட்ட துறையினரும் , மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை