. ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற கிராம மக்கள்.
ஓவேலி பகுதியில் உள்ள மக்கள் வசிப்பிடங்களை யானை வழித்தடத்திலிருந்து விடுவிக்க வேண்டும் என்று சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கூடலூா் கோட்டம், ஓவேலி பேரூராட்சியில் உள்ள ஆரூட்டுப்பாறை கிராமத்தில் மக்கள் நலக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், யானை வழித்தடம் குறித்த விளக்கத்தை தமிழக அரசும், வனத் துறையும் மக்களுக்குப் புரியும்படி தமிழில் அறிக்கையாக வெளியிட வேண்டும்.
ஓவேலியில் மக்கள் வசிப்பிடப் பகுதிகளை யானை வழித்தடங்களாக சோ்ப்பது குறித்த வனத் துறையின் அறிவிப்பு கண்டனத்துக்குரியது. மக்கள் வசிப்பிடங்களை யானை வழித்தடத்திலிருந்து விடுவிக்க வேண்டும். இதுகுறித்த நேரடியாக பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டத்தை அரசு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் என்றாலே வனநில ஆக்கிரமிப்புகளின் புகழிடம் என்று தமிழ்நாடு கேரளா கர்நாடக மாநில மக்களுக்கு நன்றாக தெரிந்த விஷயம்…. யானை வந்தா அத பிடிங்கனு போராட்டமும் பன்றாங்க, அதோட வாழ்விடம் வழித்தடத்தை எல்லாம் ஆக்கிரமிப்பும் செய்கிறார்கள்,, வழித்தடத்தை கொடுக்கக்கூடாது என்று போராட்டம் வேற இதில …. தமிழ்நாடு அரசு உடனடியாக கூடலூர் பகுதிகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற யானை வழித்தடத்தை எல்லாம் உடனடியாக மீட்க வேண்டும் என வன உயிரின , இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை .