க்ரைம்செய்திகள்விமர்சனங்கள்

மான் இறைச்சி சமைத்து சாப்பிட முயற்சித்த நபர்கள் கைது


03/05/2024ம் தேதி இரவு சுமார் 11 மணியளவில் மேட்டுப்பாளையம், நந்தவனம், பவானி ஆற்றங்கரையில் மர்ம நபர்கள் சிலர் மான் இறைச்சி எடுத்து செல்வதாக வனப்பணியாளர்களுக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில், வனச்சரக அலுவலர் தலைமையிலான தனிக்குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தணிக்கை செய்ததில் பவானி ஆற்றங்கரையில் சில இறைச்சி துண்டுகள் கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டது.

சம்பவ இடத்தை சுற்றி தணிக்கை செய்ததில் மேட்டுப்பாளையம் பிரிவு, உலிக்கல் சுற்று நிர்வாக எல்லைக்குட்பட்ட/ நீர்வள ஆதார துறை கட்டுபாட்டில் உள்ள பவானி ஆற்றங்கரையில் புதர் செடிகள் மத்தியில் ஆண் புள்ளிமான் ஒன்று இறந்து கிடந்தது மறுநாள் (04.05.2024) கண்டறியப்பட்டது. மேலும் விசாரணையில் கைப்பற்றிய இறைச்சி துண்டுகள் கண்டறியப்பட்ட புள்ளி மானின் இறைச்சி என்பது ஊர்ஜிதமானது,

தொடர்ந்து புலன் விசாரணை செய்ததில் SM நகரை சேர்ந்த


A1) A.தண்டபாணி (சுமார் வயது 25)

A2) P. சுரேஷ் (சுமார் வயது 29)

A3) S.நாசர் அலி (சுமார் வயது 22)

A4)F.பாசித்அகமது(சுமார் வயது 20)

A5)M.வினித்குமார்(வயது 21)

A6)S.முகமதுஆசாத் (வயது சுமார் 22)

ஆகிய ஆறு நபர்கள் மது போதையில் பவானி ஆற்றங்கரையில் இறந்து கிடந்த ஆண் புள்ளி மானை கண்டதும் சமைத்து சாப்பிட திட்டமிட்டு மானின் இறைச்சியை வெட்டி எடுத்து செல்ல முயற்சித்த போது வனப்பணியாளர்களை கண்டவுடன் இறைச்சியை சம்பவ இடத்திலேயே விட்டுவிட்டு தப்பியோடினர்.

மேற்கண்ட எதிரிகளை பிடிப்பதற்காக தனிக்குழு அமைத்து தேடப்பட்டு வந்த நிலையில் இன்று 05/05/2024 எதிரிகள் பிடிபட்டு வனச்சரக அலுவலகம் அழைத்து வரப்பட்டு விசாரணை மேற்கொண்டதில் எதிரிகள் A1 மற்றும் A2 மான் இறைச்சி வெட்டி எடுத்து செல்ல முயற்சித்ததும் A3 முதல் A6 வரையிலான மற்ற நபர்கள் வன உயிரின குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது.

பின் வன உயிரின குற்ற வழக்கு (WLOR.NO: 01/2024) பதிவு செய்து, மாவட்ட வன அலுவலர் அவர்களின் உத்தரவின் படி இணக்க கட்டணம் ரூபாய் ஐம்பதாயிரம் விதிக்கப்பட்டது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button