திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து துறை இரண்டாம் பணிமனையில் நடத்துனராக பணியாற்றி வருபவர் செல்வம். இவர் இன்று அரசு போக்குவரத்து பணிமனைக்கு நேரில் வந்து உடல்நிலை சரியில்லை என்று கூறி விடுமுறை தருமாறு கேட்டுள்ளார். அதற்கு நிர்வாகம் விடுமுறை தர மறுத்துள்ளதாக கூறப்படுகிறது இதனால் மனம் உடைந்த நடத்துனர் செல்வம் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தற்கொலை முயற்சிபில் ஈடுபட்டுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
