திருநெல்வேலி மாவட்டம் சாயமலைக்கு அருகில் சாலையைக் கடக்க முற்பட்டபோது புனுகுப் பூனை வாகனத்தில் அடிபட்டு இறந்திருக்கிறது.!
புனுகுப் பூனை இறந்த செய்தியை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலருக்கும் வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் வனத்துறையினர் பூனையைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக எடுத்துச் சென்றுள்ளார்கள்.!
கடும் வெயிலின் தாக்கத்தால் தண்ணீரின்றி வன உயிர்கள் இறந்து கொண்டிருக்கும்போது விபத்தில் வன உயிர்கள் பலியாவது வேதனைக்குரிய செய்தியாக இருக்கிறது.!
சாலையில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் வேகமாகச் செல்லாமல் மெதுவாகச் சென்றால் வன உயிர்களையும் காக்கலாம்.!
சாயமலையில் முள்ளம்பன்றிகள், புனுகுப் பூனை, ஆந்தையினங்கள் போன்ற அரியவகை உயிரினங்கள் இருப்பதால் இப்பகுதியை வனத்துறையினர் ஆய்வு செய்து பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க வேண்டும்.!
மேலும் இத்தகைய வன உயிர்கள் நிறைந்த சாயமலையில் குவாரி அமைக்க அரசு அனுமதி தரக்கூடாது என்பதையும் சுற்றுவட்டார மக்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.