திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரின் மையப் பகுதியான மூஞ்சிக்கல் பகுதியில் நகராட்சி குடிநீர் குழாய் உடைந்து வீணாக சாலையில் வழிந்தோடிய தண்ணீரை அந்த வழியாக வந்த பெரிய காட்டெருமை தாகம் தீர குடிநீரை அருந்தியது.
அந்த பெரிய காட்டெருமை தந்திமேடு பகுதியில் இருந்து ஆனந்தகிரி பகுதி வழியாக மூஞ்சிக்கல் பகுதிக்கு வந்தது.
காட்டருமையை கண்ட பொதுமக்கள் ஓடி ஒதுங்கி நின்றனர் சிலர் துணிச்சலாக அதன் அருகே சென்று வீடியோ எடுத்தனர்.
வனப்பகுதியில் உணவு தண்ணீர் கிடைக்காததால் காட்டில் வசிக்க வேண்டிய விலங்குகள் கொடைக்கானல் நகரில் உள்ள அனைத்து வீதிகளிலும் நடமாட தொடங்கிவிட்டது. இது பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ள நிலையில் வனத்துறையினர் வன விலங்குகள் நகருக்குள் வராத வகையில் அவற்றுக்கு தேவையான உணவு தண்ணீர் வனப்பகுதிக்கு உள்ளேயே கிடைக்கும் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது