Updated News :
பாவப்பட்ட எம்பி மீது ஒட்டுனர் கடத்தல் வழக்கில் கோர்த்துவிட்டரா? உண்மை என்ன?
இராஜபாளையம் அருகே சேத்தூர் பகுதியில் விற்பனைக்கு வைத்திருந்த 3.2 கிலோ எடை உள்ள மதிப்புள்ள இரண்டு யானை தந்தம் பறிமுதல் புலனாய்வு பிரிவு காவல் துறை நடவடிக்கை தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ஓட்டுநர் உட்பட இரண்டு பேரை பிடித்து வனத்துறை விசாரணை.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சேத்தூர் பகுதியில் யானைத்தந்தம் விற்பனை செய்வதாக விருதுநகர் புலனாய்வு பிரிவு காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் பெயரில் சார்பு ஆய்வாளர் கோபால் தலைமையில் போலீசார் சேர்த்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையின் போது சந்தேகப்படும் விதமாக சுற்றித்திரிந்த கணபதி சுந்தர நாச்சியார்புரம் சாவடி தெருவை சேர்ந்த அனந்தப்பன் (முன்னாள் திமுக ஒன்றிய துணை செயலாளர்) மகன்
ராம் அழகு (வயது 40)யானை தந்தங்களை விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில்
இவரிடம் இருந்து 3.2 கிலோ எடையுள்ள இரண்டு யானை தந்தங்களை பறிமுதல் செய்த புலனாய் பிரிவு காவல் துறையினர்.பிடிபட்ட இருவரையும்
சிவகாசி பொறுப்பு வனத்துறை ரேஞ்சர் பூவேந்தனிடம் ஒப்படைத்தனர்.
மேலும் வனத்துறை அதிகாரிகள் விசாரணையில் கணபதி சுந்தரநாச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த செல்லையா என்பவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையில் செல்லையா தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம் குமாரிடம் ஓட்டுநராக பணிபுரிந்தவன் எனவும் இரு யானைத்தந்தங்களையும் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமாருக்கு சொந்தமான அவர் தாய் தந்தையர் வசித்து வரும் தேவதானம் வீட்டிலிருந்து எடுத்து வந்ததாகவும் பின்னர் எனக்குத் தெரிந்த வேறொரு இடத்தில் இருந்து வாங்கி வந்ததாகவும் முன்னுக்கு பின் முரணாக வாக்குமூலம் அளித்த நிலையில் வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் தந்தம் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இது குறித்து தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம் குமரிடம் கேட்ட பொழுது செல்லையா என்னிடம் ஓட்டுனராக பணியாற்றிக் கொண்டிருக்கும் பொழுது திருட்டு உட்பட தவறான நடத்தை காரணமாக ஓட்டுநர் பணியில் இருந்து நீக்கிவிட்டதாகவும் .
இதன் காரணமாக வேலை இன்றி தவித்து வந்த செல்லையா மற்றும் அவரது மனைவி கை குழந்தைகளுடன் வந்து தேவதானம் பகுதியில் உள்ள எனது தாய் தந்தை வீட்டில் வேலை கேட்டதாகவும் கைக்குழந்தைகளுடன் பரிதாபமான நிலையில் இருப்பதைக் கண்டு எனது தாய் தந்தையர்கள் அவருக்கு வேலை வழங்கியதாகவும் .
அங்கு வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது பழைய பொருட்கள் போட்டு வைக்கப்பட்டிருக்கும் குடோனுக்கு சென்று குத்து விளக்கு இரும்பு மரச்சாமான்களை திருடி விற்று வந்துள்ளது தெரியவந்த நிலையில் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு வேலையை விட்டு நிறுத்தியதாகவும் கூறினார்.
மேலும் காவல்துறை விசாரணையின் போது கடத்தலில் பிடிபட்ட இரு தந்தங்களையும் உங்கள் வீட்டில் இருந்து எடுத்ததாக செல்லையா கூறுவது குறித்த கேள்வி எழுப்பிய பொழுது பரிதாபப்பட்டு வேலைக்கு சேர்த்தது போல் எனது பெயரை பயன்படுத்தினால் பரிதாபப்பட்டு வழக்கிலிருந்து காப்பாற்றுவேன் என நினைத்து கூட கூறி இருக்கலாம் மேலும் கடத்தல் தங்கத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறினார்.
கடத்தலில் ஈடுபட்ட இருவரில் ஒருவர் ராஜபாளையம் திமுக ஒன்றிய துணைச் செயலாளர் ஆனந்தப்பன் மகன் ராம் அழகு மற்றும் மற்றொரு நபர் திமுக தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார் அவரின் ஓட்டுநர் என்பதனால் கட்சிக்கும் பாராளுமன்ற உறுப்பினருக்கும் கலங்கம் விளைவிக்க பொய் கூறுகின்றனரா அல்லது வேறு யாரேனும் தூண்டுதலின் மூலம் இவ்வாறு கூறுகின்றன என்ற கோணத்தில் வனத்துறையும் காவல்துறையும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்