மின்நகர் மேலகரம் பகுதிகளில் சாலையோர கடைகளால் போக்குவரத்து பாதிப்பதுடன் சாலை விபத்தும் எற்படுகிறது
நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சிலவற்றை பெற்றுக்கொண்டு அனுமதி அளித்து வருவதாக குற்றச்சாட்டுகள் வருகிறது
குற்றால சீசன் காலங்களில் புற்றீசல் போன்று உருவாகிவரும் கடைகளால் பொதுமக்கள் குறிப்பாக வெளியூரில் இருந்து வரும் சுற்றுலாவாசிகள் பெரிதும் பாதிப்படைவார்கள் இவர்களை ஒழுங்குபடுத்தவே காவல்துறையினருக்கு வேலை சரியாக இருக்கும்
சாலையோர கடைகளுக்கு முறையான லைசன்ஸ் மற்றும் கடை போடுவதற்க்கான இடத்தினை தேர்வு செய்து தனியார் இடம் என்றால் no objection கடிதம் பெற்ற பின்னர் அனுமதித்தால் புற்றீசல் குறையும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்