யானை தந்தங்களை கடத்தி விற்க முயன்ற வழக்கில் தென்காசி திமுக எம்பி தனுஷ்குமாரின் ஓட்டுநர் ராஜபாளையத்தில் கைது!
தென்காசி திமுக மாவட்ட ஊராட்சி குழு தலைவியின் கணவர் போஸ், சமீபத்தில் குட்கா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், மீண்டும் ஆளும்கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நடைபெற்றுள்ள இந்த யானை தந்த கடத்தல் கைது சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…
கடத்தல் தந்தம் மாட்டிய செய்தி அறிந்ததும் திமுக எம்பி தனுஷ்குமார் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது!
திமுக எம்பி தனுஷ்குமாரை தப்ப வைக்கும் முயற்சியில் ஆளும்கட்சி பிரமுகர்கள் சிலர் மூலம ல கவனமாக காய் நகர்த்தி வருவதாக தகவல்கள் வெளிவருகின்றன…
யானை தந்த கடத்தல் வழக்கில் திமுக எம்பி தனுஷ்குமாரின் ஓட்டுநர் செல்லையாவுடன் கைது செய்யப்பட்ட மற்றொரு நபர் ராஜபாளையம் ஒன்றிய முன்னாள் திமுக துணை செயலாளரின் மகன் ராம் அழகு என்பதும் குறிப்பிடத்தக்கது!