திருப்பூர் மடத்துக்குளத்தை சேர்ந்த விமல் கோகுல் ஈஸ்வர பாண்டியன் ஆகிய மூன்று பேரும் பழனி பேருந்து நிலையத்தில் இருந்து தாராபுரம் செல்வதற்காக பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தனர் .
அப்போது அருகில் இருந்த பழனி ஜகவர் நகரை சேர்ந்த சக்திவேல் , அஜித் குமார் என்பவர் பணத்தை பறித்துக் கொண்டு ஓடிய நபர்களை பழனி நகர போலீசார் மடக்கி பிடித்து சார்பு ஆய்வாளர் விஜய் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
மேலும் டிஎஸ்பி தனஞ்ஜெயன் உத்தரவின் பேரில் மற்றும் நகர காவல் ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் பேருந்து நிலையம் பகுதியில் அதிகாரிகள் தொடர்ச்சியாக ரோந்து செய்து வருகின்றனர் இதுபோல் பிட்பக்கெட் அடிக்கும் நபர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர் .
பிக்பாக்கெட் அடித்த நபர்களை கைது செய்த நகர காவல் நிலைய அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்