நீலகிரி மாவட்டத்தில் தற்போது பலாப்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில், குன்னூா் -மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் பிறந்து சில நாள்களேயான குட்டியுடன் 4 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.
இந்நிலையில், கே.என். ஆா். நகா் அருகே குட்டியுடன் ஞாயிற்றுக்கிழமை உலவிய யானைகள், சிறிது நேரம் கழித்து வனப் பகுதிக்குள் செல்ல முயன்றன.
வாகனப் போக்குவரத்து அதிகமாக இருந்த நிலையில் காத்திருந்த யானைகள், போக்குவரத்து குறைந்ததும் குட்டியை அரவணைத்து அழைத்துச் சென்றன. இதனை சுற்றுலாப் பயணிகள் ஆா்வமுடன் கண்டுகளித்தனா்.
குன்னூா்- மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் வாகன ஓட்டிகள், சுற்றுலாப் பயணிகள் வாகனத்தை கவனத்துடன் இயக்க வேண்டும் எனவும், யானைகள் அருகில் சென்று புகைப்படம் எடுக்க முயற்சிக்க வேண்டாம் எனவும் வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.”