கோக்கு மாக்குக்ரைம்செய்திகள்விமர்சனங்கள்
Trending

திருச்சி ரயில் நிலையத்தில் கவர்ச்சி நடனமாடி ரீல்ஸ் வெளியிட்ட 3 இளம்பெண்களுக்கு அபராதம்

திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் 3 இளம்பெண்கள் ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடி ரீல்ஸ் எடுத்து அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். அந்த இளம்பெண்கள் உடலை கவ்விப்பிடிக்கும் ஜீன்ஸ், பனியன் உடை அணிந்து உடலை வளைத்து நெளித்து, ‘மே மாதம் 98ல் மேஜர் ஆனேனே’ என்ற பாடல் பின்னணியில் ஒலிக்க கவர்ச்சிகரமாக ஆடியுள்ளனர்.இந்த காட்சிகள் இன்ஸ்டாகிராமில் வைரல் ஆனது.

இதுகுறித்து திருச்சி ரயில்வே போலீசார் கூறுகையில், ‘இந்த சம்பவம் கடந்த 6ம் தேதி நடந்தது. வீடியோ வெளியிட்ட பெண்கள் திருச்சி தில்லைநகரை சேர்ந்தவர்கள். அவர்கள் மூவரும் அங்குள்ள நடன பள்ளியில் நடனம் பயின்றது வந்தது தெரிந்தது. இதையடுத்து, 3 பேருகும் ரூ.1120 அபராதம் விதித்து ரயில்வே டிக்கெட் பரிசோதகர், அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தார்’ என்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button