மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கலைவாணி, பாதுகாப்பு அலுவலர்கள் செல்வம், ஜோதிமணி, சரவணக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் திண்டுக்கல் நகர், நத்தம், வத்தலக்குண்டு, ஒட்டன்சத்திரம், பழநி உள்ளிட்ட பகுதி மாம்பழ குடவுன்கள், விற்பனை கடைகளில் ஆய்வு செய்தனர்
திண்டுக்கல் பஸ்ஸ்டாண்ட் அருகில் செயல்படும் 2 பழக்கடைகளில் ஆய்வு செய்ததில் சுகாதாரமற்ற முறையில் மாம்பழங்கள் இருந்தது தெரிந்தது. தலா ரூ.3 ஆயிரம் என ரூ.6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.