கேரள தலைநகர் திருவனந்தபுரம் நகரத்தில் கடந்த மே 15ஆம் தேதி ஒரு உணவகத்தில் நடைபெற்ற மோதல் தொடர்பாக நான்கு இந்திய விமானப்படையினர் மீது கேரள காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர் இது தொடர்பாக தற்போது இந்திய விமானப்படையும் விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
இந்திய விமானப்படையும் இந்த நிகழ்வு குறித்து விசாரணை நடத்த Airforce Provost என்கிற விமானப்படை காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது மேற்குறிப்பிட்ட நான்கு விமானப்படையினரும் திருவனந்தபுரத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தென் கட்டளையக விமானப்படையை சேர்ந்தவர்கள் ஆவர்.