திண்டுக்கல் மாவட்டத்தில் ரவுடிகள் கொட்டத்தை ஒடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக் கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இருப்பினும் ரவுடிகள் போலீசாரின் கண்ணை மறைத்து குற்றச் செயல்களில் ஈடுபடுவது என்பது தவிர்க்க முடியாததாகவே இருந்து வருகிறது
இதுகுறித்து தென் மண்டல ஐ.ஜி.கண்ணன் உத்தரவின் பேரில் திண்டுக்கல் மாவட்ட எஸ்பி.பிரதீப் மேற்பார்வையில் ஒரு ரவுடி ஒழிப்பு பிரிவு படையினரும் மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்ட DSP தலைமையில் ரவுடி ஒழிப்பு பிரிவு படையினரும் மற்றும் உளவுப் பிரிவு போலீசார், காவல் நிலைய போலீசார் ரவுடிகளை ரகசியமாகவும் தீவிரமாகவும் கண்காணித்து வருகின்றனர். மேலும் குற்ற செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கும் வகையில் போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள ஏ ப்ளஸ், ஏ, பி, சி பிரிவு ரவுடிகள் அனைவரும் போலீசாரின் கண்காணிப்பில் இருந்து வருவதால் ரவுடிகள் என்ன செய்தாலும் போலீசாருக்கு தெரிந்து விடும் மேலும் ரவுடிகளின் கொட்டம் படிப்படியாக ஒடுக்கப்படும் என்றும் ரவுடிகளை ஒழிப்பதற்கான அதிரடி வேட்டை தொடர்ந்து நடைபெறும் என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்