திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் மாடுகள் சுற்றி வருகின்றன . இரவு நேரங்களில் சாலைகளில் ஆங்காங்கே படுத்துக் கொள்கின்றன . இதனால் வாகனங்களில் வருவோர் அவ்வபோது கீழே விழுந்து விடும் சம்பவங்கள் நடந்து கொண்டுதான் உள்ளது .
குறிப்பாக ஆர் எம் காலனி 13வது கிராஸ்லில் தினமும் சுமார் 100 மாடுகள், காளைகள், கன்றுகள் சுற்றித் திரிகின்றன. இது மக்களுக்கும் குழந்தைகளுக்கும் பீதி மற்றும் சுகாதாரமற்ற நிலையை உருவாக்கிறது. ஒவ்வொரு வீடும் தெரு முழுதும் மாட்டுச் சாணத்தால் நிரம்பியுள்ளது.
மேலும் அரண்மனை குளம் ரோடு , மேட்டு பட்டி , ஸ்கீம் ரோடு , பழனிரோடு , மரியநாதபுரம் , மீன் மார்க்கெட் பகுதி , மாநகராட்சி பின்புற சாலை , நாகல் நகர் ரவுண்டானா , மெங்கில்ஸ் ரோடு , கோவிந்தாபுரம் மின்மாயான பகுதி ,பேருந்து நிலைய சுற்றி உள்ள பகுதி ஆகியவற்றிலும் மாடுகள் சர்வ சாதாரணமாக சுற்றி திரிகின்றன.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் , விலங்குகள் நல ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்தால் மாநகராட்சி அதிகாரிகள் பெயரளவில் நடவடிக்கை எடுப்பதாகவும் தொடர் நடவடிக்கை எடுக்காமல் ஒரு நாள் மட்டும் மாடுகளை பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து மாடுகளை திரும்ப ஒப்படைத்து விடுகின்றனர் .
இதனால் மாடுகள் அடுத்த நாளே மீண்டும் சாலைகளில் சுற்றி திரிகின்றன . இது போன்ற சம்பவங்களில் மாடுகளை மீண்டும் உரிமையாளரிடம் ஒப்படைக் க கூடாது என்றும் அங்கீகாரம் பெற்ற தொண்டு நிறுவனம் (அ) கோசாலையில் தான் விட வேண்டும் என்று விலங்குகள் வதை தடுப்பு சட்டம் – 1960 – ல் தெளிவாக கூறப்பட்டுள்ள நிலையில் மாநகராட்சி அதிகரிகளின் நடவடிக்கைகள் வெறும் கண்துடைப்பாக உள்ளதாக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர் .
மேலும் இது போன்ற விலங்குகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு காவல் துறைக்கும் உள்ள நிலையில் அவர்கள் ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை என தெரியவில்லை எனவும் ஆர்வலர்கள் கூறுகின்றனர் .
அதே போல விலங்குகள் தொடர்பான நடவடிக்கைகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க கால்நடை பராமரிப்பு துறையின் கீழ் மாவட்ட ஆட்சி தலைவரின் தலைமையில் இயங்கி வரும் விலங்குகள் வதை தடுப்பு சங்கம் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை எனவும் கூறிகின்றனர்
சாலைகளில் சுற்றி திரியும் இந்த மாடுகளின் மீதும் அதன்உரிமையாளர்கள் மீதும் திண்டுக்கல் மாநகராட்சி அதிகாரிகள் , காவல் துறையினர் மற்றும் விலங்குகள் வதை தடுப்பு சங்கம் ஆகியோர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்?
ம