பெங்களூருவில் இருந்து கடத்தி வந்து செம்பட்டி அருகே புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக திண்டுக்கல் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் செம்பட்டி அருகே j.புதுப்பட்டி பகுதியில் நள்ளிரவு நேரத்தில் திடீர் ஆய்வு செய்தனர் அப்போது திண்டுக்கல்லை சேர்ந்த பாண்டியராஜன் என்பவர் 400 கிலோ புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து 400 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் செம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் மேற்படி புகார் குறித்து செம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
