திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை வனச்சரக பணியாளர்கள் 30/05 / 2024 இரவு முதல் வனச்சரக எல்லை முழுவதும் கண்காணிப்பு பணி மேற்கண்ட போது செம்பட்டி அருகே உள்ள ஆதிலட்சுமிபுரம் to சின்னாளபட்டி செல்லும் பகுதியில் காட்டு பன்றி கறி வைத்திருந்த ஸ்டீபன்(28) என்பவரை பிடித்தனர் .
அவரிடம் விசாரணை செய்ததில் கடந்த 06/08/2022 அன்று இதே சிறுமலை வனச்சரக வன உயிரின குற்ற எண் 06/2022- ன் படி துப்பாக்கி வைத்து மான்களை வேட்டையாடி கைது செய்யப்பட்ட A.வெள்ளோடு பகுதியை சேர்ந்த சக்கரியாஸ் (எ) சக்கரியா தான் மீண்டும் தொடர்ந்து வேட்டையாடி வருவதும் ஸ்டீபனுக்கு காட்டு பன்றி கறியை விற்பனை செய்ததும் தெரியவந்தது.
தான் தேடப்படுவதை தெரிந்து கொண்ட சக்கரியா தலைமறைவாகி விட்டதாகவும் கூறப்படுகிறது . இந்த சக்கரியா மற்றும் இவரது மகன்கள் பல்வேறு துப்பாக்கி சுடும் கிளப்களில் உறுப்பினராகவும் இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.
எனவே தலைமறைவாக உள்ள தொடர்ச்சியாக வேட்டைக்கு சென்று கறிகளை விற்பனை செய்யும் முக்கிய குற்றவாளி சக்கரியா(60) என்பவரை சிறுமலை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருவதாக கூறப்படும் நிலையில் சக்கரியா அரசியலில் உள்ள முக்கிய புள்ளி ஒருவரிடம் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் முடிந்தால் அங்கு வந்து என்னை கைது செய்து பாருங்கள் என வனத்துறையினருக்கு சவால் விடும் தோனியில் பேசியதாகவும் வனத்துறையில் ஒரு பேச்சு உலா வருகிறது.
தலைமறைவு குற்றவாளி சக்கரியா (60) -ன் பழைய புகைப்படம் 👇👇👇