திருச்சி செல்வதற்காக அவர் வந்த நிலையில், உடமைகள் சோதனையில் துப்பாக்கி குண்டுகள் இருப்பது தெரியவந்தது.
துப்பாக்கி உரிமம் தன்னிடம் இருக்கிறது, குண்டுகள் இருப்பது தெரியாமல் பையை எடுத்து வந்ததாக அவர் கூறியுள்ளார்.
தேர்தல் நடத்தை விதிகளால் நடிகர் கருணாஸ் தனது துப்பாக்கியை ஏற்கனவே காவல் நிலையத்தில் ஒப்படைத்ததுள்ளதால், அதற்கான ஆவணங்களை சரிபார்த்து குண்டுகளை அவரிடமே பாதுகாப்பு படையினர் திரும்ப வழங்கினர். விசாரணை முடிந்து அவர் காரிலேயே திருச்சிக்கு புறப்பட்டுச் சென்றார்.