திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கல்துரை பகுதியில் சட்டவிரோதமாக சேவல் சண்டை போட்டி நடத்திய 20க்கும் மேற்பட்டோர் கைது. அவர்களிடமிருந்து கார் மற்றும் பந்தயம் கட்டி சூதாடிய பணம் மற்றும் சேவல் ஆகியவை பறிமுதல் செய்து கீரனூர் போலீசார் விசாரணை.
பழனி கீரனூர் அருகே தோட்டத்தில் சேவக்கட்டு நடத்திய 55 பேரை டி.எஸ்.பி தனஜெயம் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து 7 கார் மற்றும் 20 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.