நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சக்திவேல் (60) என்பவரை கவனித்து கொள்ள ஆள் இல்லாத காரணத்தினால்,
மருத்துவமனை ஊழியர்கள் அவரை கொட்டும் மழையில் வெளியில் கொண்டு விட்டு சென்ற சம்பவம் நெல்லையில் அரங்கேறியது.
அங்கிருந்த சிலர் இதனை செல்போனில் வீடியோ எடுத்ததை கவனித்த அரசு மருத்துவமனை ஊழியர்கள் அவரை மீண்டும் வீல் சேரில் அமர வைத்து சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.
அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவரை வெளியில் கொண்டு விடுவது மனிதாபிமான செயலா ? என்ற கேள்வியோடு வீடியோ வைரலாகிறது.