தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களில் பெரும்பாலானோர், பா.ஜ., கூட்டணிக்கு ஓட்டளித்துள்ளனர். இதன் காரணமாக, தபால் ஓட்டுப்பதிவில், பா.ஜ., கூட்டணி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், தங்கள் கோரிக்கைகளை, தமிழக அரசு நிறைவேற்றாமல் உள்ளதால், அதிருப்தியில் உள்ளனர். இது தேர்தலில் எதிரொலித்துள்ளது.மொத்தம் 27 லோக்சபா தொகுதிகளில், அ.தி.மு.க., கூட்டணியை விட கூடுதல் ஓட்டுகள் பெற்று, தபால் ஓட்டில் பா.ஜ., கூட்டணி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
ஆளும்கட்சியின் நடவடிக்கைகள் மீதுள்ள அதிருப்தி காரணமாகவும் , அதிமுக மீதுள்ள நம்பிக்கையின்மை கரணமாகவும் தான் பா.ஜ., கூட்டணிக்கு அதிகம் ஓட்டளித்துள்ளதையே இது காட்டுகிறது என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர் .