செய்திகள்டிரெண்டிங்
Trending

இந்தியாவின் முன்னணி காட்டுயிர் ஆய்வாளர் முனைவர் ஏ.ஜே.டி. ஜான்சிங் காலமானார் .

கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலம் குன்றியதால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை பெங்களூரில் உள்ள அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார்

நமது திருநெல்வேலி மாவட்டத்துக்காரரான முனைவர் ஜான்சிங்
இந்திய காடுகள் அனைத்தையும் அறிந்தவர். அவற்றில் பெரும்பாலானவற்றை நடந்தே கடந்தவர். உடல் நலம் குன்றுவதற்குச் சில மாதங்களுக்கு முன்பு கூட வட இந்தியக் காடுகளில் ஆய்வுக்காகப் பல கிலோமீட்டர் நடந்த அனுபவத்தை பதிவு செய்துள்ளார்.

இந்திய காட்டுயிர் நிறுவனத்தின் முதன்மையராக ( Dean, Wildlife Institute of India) பல ஆண்டுகள் பணியாற்றியவர். அவரால் பயிற்றுவிக்கப்பட்ட இந்திய வனப்பணி அலுவலர்கள் (IFS officers) நாடு முழுவதும் பணியாற்றுகிறார்கள். இந்தியக் காடுகள் பற்றியும் காட்டுயிர்கள் பற்றியும் அவர் எழுதியுள்ள நூல்கள் அரிய ஆவணங்கள். அவரது ஆழமான படிப்பறிவும் இடைவிடாத கள ஆய்வும் இந்தியக் காட்டுயிர் மேலாண்மைக்குப் பெரும்பங்காற்றியுள்ளது. பலர் முரண்பாடு கொள்வார்கள் என்றாலும் எத்தகைய சபையிலும் தமது கருத்துக்களைத் தயக்கமின்றி எடுத்துரைப்பார்.

அவரது மரணம் காட்டுயிர்களின் மீது அக்கறை கொண்ட அனைவருக்கும் பேரிழப்பு.
நாடு ஒரு பேரறிஞரை இழந்துள்ளது.

அன்னாரின் குடும்பத்தார், உறவினர், நண்பர்கள், மாணவர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button