கோக்கு மாக்குக்ரைம்செய்திகள்விமர்சனங்கள்
Trending

பாபநாசம் வனத்துறை செக்போஸ்டில் போலீசாரை கன்னத்தில் பளார் என அறைந்த வனத்துறை அதிகாரி….

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள அரியநாயகிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த்(30) புளியங்குடி  காவல் துறை கண்காணிப்பாளர்  அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.

  இந்த நிலையில் ஆனந்த் தனது குடும்பத்துடன் பாபநாசம் மேலே உள்ள காரையார் பகுதியில் உள்ள சொரிமுத்தை அய்யனார் கோயிலுக்கு சென்றிருந்தார். செல்லும் வழியில் பாபநாசம் வனத்துறைக்கு  சொந்தமான டோல்கேட் பகுதியில் அவர் சென்ற வாகனத்தை மறித்து வனத்துறையினர் பரிசோதனை செய்தனர்.

  அப்பொழுது டீ குடிக்கும் பேப்பர் கப் இருப்பதை கண்ட வனத்துறையினர் அதை பறிமுதல் செய்து விட்டனர். இதனை தொடர்ந்து  சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு சென்ற பொழுது அவர் டீ குடிப்பதற்காக அங்கிருந்த ஒரு கடையில் தண்ணீர் குடிக்கும் பிளாஸ்டிக் கப் வாங்கியதாகவும் கூறப்படுகிறது .

சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பி வரும்பொழுது வனத்துறை செக்போஸ்டில் பறிமுதல் செய்யப்பட்ட டீ கப் உள்ளிட்டவைகளை ஆனந்த் கேட்டுள்ளார். மேலும் இங்கு நீங்கள் இதை பறிமுதல் செய்து விட்டீர்கள் ஆனால் மேலே சட்டத்திற்கு புறம்பாக பிளாஸ்டிக் கப் விற்பனை செய்கிறார்கள். இது தங்களின் கவனத்திற்கு வரவில்லையா? என ஆனந்த் கேள்வி எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.

இதைக் கேட்பதற்கு நீ யார் என்று அங்கு பணியில் இருந்த வனத்துறை அதிகாரி கேட்டுள்ளார். போலீசார் என அவர் கூறியதாகவும் போலீஸ் என்றால் நீ கேட்பியா எனக்கூறி அவரை பளார் என கன்னத்தில் அறைந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அவரை ஆபாசமாக பேசியதாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அவருடன் வந்த அவரது குடும்பத்தினர் எதற்காக அவரை அடித்தீர்கள் என  கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் அதற்கு அவர்களிடம் சரியான பதில் சொல்லாமல் அவர்களையும் வனத்துறை அதிகாரிகள் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

 இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து  வந்த காவல்துறையினர் இரு தரப்பினரையும் சமரசம் செய்ய முயன்றனர். இதனை தொடர்ந்து ஆனந்த் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button