நீலகிரி மாவட்டம், கூடலூா் வனச் சரகத்துக்குள்பட்ட புளியம்பாறை கிராமத்தில் உள்ள தனியாருக்குச் சொந்தமான பாக்குத் தோப்பில் சிறுத்தை இறந்து கிடந்துள்ளது.
இதனைப் பாா்த்த அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்கு சனிக்கிழமை தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்கு சென்ற கூடலூா் வனச் சரக அலுவலா் ராதாகிருஷ்ணன், வன ஊழியா்கள் சிறுத்தையின் சடலத்தை ஆய்வு செய்தனா்.
இதையடுத்து, முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாரை வரவழைத்து உடற்கூறாய்வு செய்யப்பட்டது.
இதில், உயிரிழந்தது 5 வயதுடைய பெண் சிறுத்தை என்பது தெரியவந்தது.
உயிரிழப்புக்கான காரணம் உடற்கூறாய்வு அறிக்கையில் தெரியவரும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.”