நீலகிரி மாவட்டம் கூடலூர்,ஓவேலி,தேவர்சோலை,நெலாகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தற்போது யானைகள் உணவு தேவைக்காக மக்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் சாலைகளில் அதிக அளவில் நடமாடிவருகின்றன
இந்த பகுதிகளில் பலாப்பழ சீசன் தொடங்கியுள்ளதால் யானைகளுக்கு பிடித்த உணவான பலாப்பழத்தை உண்பதற்காக யானைகள் பகல் நேரங்களில் மட்டுமின்றி இரவு நேரங்களில் குடியிருப்பை சுற்றி வந்து தனக்கு பிடித்த பலா பழங்களை உண்டு செல்கின்றன
இந்த நிலையில் கூடலூர் நகராட்சிக்குட்பட்ட புத்தூர் வயல் செல்லக்கூடிய முக்கிய சாலையில் சமரிட்டன் என்ற தனியார் மருத்துவமனை அருகில் இரவு 10 மணியளவில் யானை ஒன்று நடமாடியது.
புத்தூர் வயல் பகுதியில் இருந்து இரண்டுசக்ர வாகனத்தில் வந்த இருவர் மருத்துவமனை அருகில் வரும்பொழுது வளைவில் 10 அடி.தூரத்தில் எதிரே யானை நிற்பதை பார்த்ததும் இரண்டு சக்ர வாகனத்தை திருப்ப முயற்சித்தனர்.
அவர்களை பார்த்த யானை தாக்குவதற்காக முற்பட்டபோது அவர்கள் இருசக்கர வாகனத்தை அங்கே விட்டுவிட்டு விழுந்து எழுந்து ஓடி உயிர் தப்பினர்.
மருத்துவமனை வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது