திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கொத்தையம் ஊராட்சிக்கு உட்பட்டவெடிக்காரன் வலசில் விவசாயத்திற்கு பயன்பட்டு வந்த அரளி குத்து குளத்தை தரிசு நிலமாக அறிவித்து சிட்கோ அமைக்க தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் விவசாயிகளை பாமக மாநில பொருளாளர் கவிஞர் திலகபாமா நேரில் சந்தித்து ஆறுதல் கூறி தமிழக அரசு இத்திட்டத்தை கைவிடாவிட்டால் 24ம் தேதிக்கு பிறகு விவசாயிகளுடன் சேர்ந்து 10 க்கும் மேற்பட்ட ஜே.சி.பி இயந்திரத்துடன் இந்த குளத்தை தூர்வாரி விவசாயத்திற்கு பயன்படும் வகையில் பொதுமக்களுக்கு ஒப்படைக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணிக்கு எச்சரிக்கை விடுத்தார்
கவிஞர் திலகபாமா.அரளி குத்து குளம் 1965 ஆம் ஆண்டு சிறிய நீர் பாசன திட்டத்தின் கீழ் குளமாக கட்டப்பட்டு இரண்டு மதகுகளுடன் பயன்பாட்டுக்கு வந்தது.அப்போது நீர் பாசன அலுவலகம் திருச்சியில் இருந்தது.அடிமடையில் நெல் விவசாயம் செய்தனர்.இது ஓரளவு எல்லோருக்கும் தெரியும்.சமீப காலமாக மழை குறைந்ததால் குறைந்த அளவு தண்ணீர் குளத்தில் உள்ளது. குளத்தை தரிசு நிலமாக மாற்றி சிட்கோ விற்கு நிலம் மாற்றுவதை அந்த பகுதி மக்கள் மிகுந்த வேதனையுடன் எதிர்க்கிறார்கள்.