இரும்பு தடுப்பு அமைப்பு
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பகுதியில் பாதையில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தி ஆம்புலன்ஸ் செல்ல இடையூறு ஏற்படுத்தி வருவதாக இன்று ( 17-06-24) மாலை மலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அடுத்து மருத்துவமனை நிர்வாகம் டீன் சுகந்தி ராஜகுமாரி உத்தரவின் பேரில், கண்காணிப்பாளர் வீரமணி மேற்பார்வையில், இரும்பு தடுப்பு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.