வேலூர் மாவட்டம் , அணைகட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உனை மொட்டூர் கிராமத்தை சேர்ந்த முகேஷ் என்பவர் வளர்த்து வந்த இரண்டு நாய்களில் ஒன்று கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு (17/06/2024) அன்று அப்பகுதியில் கிடந்த ஒரு பொருளை கடித்ததில் தலை சிதறி இறந்தது .
முகேஷ் அவர்களது தாயார் அருகே சென்று பார்த்த போது வன உயிரின வேட்டைக்கு பயன்படுத்தபடும் அவுட்டு காய் எனப்படும் நாட்டு வெடிகுண்டு ஒன்று வெடிக்காமல் கிடந்ததுள்ளது . இரவு நேரத்தில் என்ன செய்வது என தெரியாமல் அணைகட் காவல் நிலையம் சென்று நடந்தவைகளை கூறியுள்ளார் .
காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வெடிக்காமல் கிடந்த நாட்டு வெடுண்டை மட்டும் கைப்பற்றி சென்று விட்டனர் . பின்னர் சென்னையில் வேலை பார்த்து வரும் முகேஷ் – யை காவல் நிலையம் வர சொல்லியதால் அடுத்த நாள் (18/06/2024) காலை காவல் நிலையத்தில் வந்து ஆஜரானார் .
அவரிடம் இறந்த நாயை உடனடியாக எரித்துவிடுமாறு கூறியுள்ளனர் . இதனால் என்ன செய்வதென்று தெரியாத நிலையில் இருந்த முகேஷ் – யை விலங்குகள் நலன் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடும் சிலர் விபரங்களை பெற்று சம்மந்தபட்ட அனைத்து துறை உயரதிகாரிகளுக்கும் புகார் தெரிவித்து உள்ளனர் .
காவல் துறை உயரதிகாரிகள் இன்று காலை சம்பவ இடத்தை பார்வையிட்டு வழக்கு பதிந்து இறந்து கிடந்த நாயை பிரேத பரிசோதனை செய்யவும் , நாட்டு வெடிகுண்டை இங்கு வீசி சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் சம்மந்தபட்ட காவல் நிலையத்தினருக்கு உத்தரவிட்டுள்ளனர்.