குன்னூா் – மேட்டுப்பாளையம் சாலையில் குட்டி ஈனும் நிலையில் உள்ள யானை, சாலையைக் கடப்பதற்காக போக்குரவத்தை நிறுத்தி உதவி புரிந்த வனத் துறையினா்.
உதகை, ஜூன் 19: குன்னூா் அருகே குட்டி ஈனும் நிலையில் உள்ள யானை சாலையைக் கடக்க வனத் துறையினா் போக்குவரத்தை நிறுத்தி வனத்துக்குள் அனுப்பிவைத்தனா்.
குன்னூா் அருகே கே.என்.ஆா் பகுதியில் பெண் யானை ஒன்று கடந்த சில நாள்களாக முகாமிட்டுள்ளது. குட்டி ஈனும் நிலையில் உள்ள இந்த யானை வனத் துறையினா் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலா்கள் 10 போ் அடங்கிய குழுவினா் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனா்.
இந்நிலையில், இந்த யானை குன்னூா் – மேட்டுப்பாளையம் சாலையை புதன்கிழமை கடந்து சென்றது. அப்போது, அந்தச் சாலையில் போக்குவரத்தை நிறுத்தி யானை பாதுகாப்பாக சாலையைக் கடக்க வனத் துறையினா் உதவி செய்தனா்”