மதுரை மாநகரில் தமுக்கம் சந்திப்பு முதல் கோரிப்பாளையம் சந்திப்பு வரையிலான பகுதியில் மேம்பால கட்டுமான பணிகள் நடைபெற இருப்பதால், அப்பகுதியில் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டு, வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமமின்றி நகருக்குள் சென்றுவர 22.06.2024 முற்பகல் மற்றும் பிற்பகல் நேரங்களில் சோதனை ஓட்டமாக கீழ்க்கண்டவாறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.
M.G.R பேருந்து நிலையத்திலிருந்து வரும் வாகனங்கள் கே.கே.நகர் ஆர்ச், கே.கே.நகர் 80 அடிச்சாலை, ஆவின் சந்திப்பு, ஆசாரிதோப்பு சந்திப்பு, வைகை வடகரை ரோடு, செல்லூர் ரவுண்டானா, தத்தனேரி மெயின் ரோடு வழியாக ஆரப்பாளையம் செல்ல வேண்டும்.
நத்தம் மற்றும் அழகர் ரோடு வழியாக ஆரப்பாளையம் மற்றும் பெரியார் செல்லும் வாகனங்கள் அவுட் போஸ்ட், மாவட்ட நீதிமன்றம், கே.கே.நகர் ஆர்ச். கே.கே.நகர் 80 அடிச் சாலை, ஆவின் சந்திப்பு, சாத்தமங்கலம் ரோடு, பனகல் ரோடு, கோரிப்பாளையம் சந்திப்பு, AV பாலம் வழியாக வந்து கீழவெளிவீதி மற்றும் யானைக்கல், வடக்குமாரட் வீதி செல்ல வேண்டும்.