திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கொத்தயம் ஊராட்சிக்கு உட்பட்ட அரளி குத்து குளத்தை தரிசு நிலமாக அறிவித்து சிப்கோ அமைக்க தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது .
இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் இன்று காவல்துறை எதிர்ப்பை மீறி அவசர கூட்டம் நடத்தினர். இதில் பாமக பாஜக அதிமுக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
வருகின்ற 24ஆம் தேதி ஒட்டன்சத்திரம் தாசில்தாரை சந்தித்து கருத்து கேட்டு கூட்டத்தில் கலந்துகொண்டு மனு அளிக்க உள்ளோம். தமிழக அரசு சிப்காட் அமைக்கும் திட்டத்தை கைவிட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும். தவறும் பட்சத்தில் இப்பகுதி விவசாயிகளை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என பாட்டாளி மக்கள் கட்சி மாநில பொருளாளர் திலகபாமா பேட்டி.