திண்டுக்கல் மாநகராட்சியில் வருவாய் துறை பிரிவு, சுகாதாரப்பிரிவு உள்ளிட்ட கட்டிடங்களின் மேற்கூரைகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. பணியாளர்கள் எப்பொழுது இடிந்து விழும் என்று உயிருக்கு பயந்து அச்சத்துடன் வேலை செய்கின்றனர்.
மேலும் மாநகராட்சியில் குளோரினேசன் செய்யாமல் இருப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது
திண்டுக்கல் மாநகராட்சியில் பொறியியல் பிரிவு செயல் படுகிறதா என்ற கேள்வி எழுகிறது
கட்டிடங்களின் மேற்கூரை இடிந்து உயிர் பலி ஏற்படும் முன்பு, தொற்றுநோய் பரவும் முன்பு இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.