
குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோதையார் பகுதியில், ரப்பர் பால் வெட்டுவதற்கு சென்ற மணிகண்டன் என்பவரை காட்டு யானை மிதித்து பலியானர். அதை தொடர்ந்து சட்டமன்றத்தில் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.வனத்துறை அமைச்சர் மதிவேந்தான்,உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணமாக அறிவித்தார்.அதோடு தமிழகஅரசு ரப்பர் கழகம் சார்பாக ரூபாய் 10 லட்சம் என மொத்தம் 20 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது