நீலகிரி மாவட்டம் கூடலூரை சுற்றி உள்ள பகுதிகளில் காட்டு யானைகள் தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளில் உலா வருகிறது.
பட்டப் பகலில் காட்டு யானைகள் குடியிருப்புகள், சாலைகள், விளைநிலங்களில் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதாக தொடர்ந்து பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்
பொதுமக்கள் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகி வருவதால் பொதுமக்களால் மாவட்ட வன அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
இதை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் திரு.வெங்கடேஷ் பிரபு மற்றும் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்
இதனை தொடர்ந்து கும்கி யானைகளை வரவழைத்து ரோந்து பணியில் ஈடுபடுபடுத்தபடும்
அத்துடன் வன பணியாளர்களும் அதிகப்படுத்தப்படும் என உறுதி உறுதியளித்தனர்.
இதனை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டம் கைவிடப்பட்டது.
இதை தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் திரு வெங்கடேஷ் IFS அவர்களின் அறிவுறுத்தலின்படி முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் இருந்து கும்கி பயிற்சியில் மிகவும் தேர்ச்சி பெற்ற சங்கர் மற்றும் சீனிவாசன் என்ற இரண்டு கும்கி யானைகள் முதல் கட்டமாக களத்தில் இறக்கப்பட்டது
இரவு நேரங்களில் காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சில யானை வழித்தடங்களில் இந்த இரண்டு கும்கி யானைகளும் தங்களின் ரோந்து பணிகளை தொடங்கியது
50க்கும் மேற்பட்ட வன ஊழியர்களும் இணைந்து ரோந்து பணிகளை மேற்கொண்டனர்
பொதுமக்களின் போராட்டத்தை தொடர்ந்து இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு வன ஊழியர்களுடன் தொரப்பள்ளி, புத்தூர் வயல், மார்த்தோமா நகர் பகுதிகளில் இரவு நேரத்தில் முழுவதுமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்
காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை கண்காணிக்க களத்தில் இறங்கிய கும்கி,யானைகள் வன ஊழியர்கள் பட்டாளத்தால் பொதுமக்கள் சிறிது நிம்மதி அடைந்துள்ளனர்.