பொள்ளாச்சி அருகே போதையில் இருந்த இருவரின் உடல் நிலை மோசமடைந்ததற்கு காரணம் கள்ளச்சாராயம் அல்ல என திருப்பூர் போலீசார் தடாலடியாக மறுத்த நிலையில் திருப்பூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட மாவடப்பு மலைக்கிராமத்தைச் சேர்ந்த ராமன் சப்ளை செய்த சாராயம் குடித்தே இருவரும் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக தற்போது எப்.ஐ.ஆர். பதிவு செய்திருக்கின்றனர் கோவை மாவட்ட போலீசார்.
