திண்டுக்கல் புறநகர் பகுதிகளான தாடிக்கொம்பு, GTN- கல்லூரி பின்புறம், மற்றும் தாலுகா காவல் நிலைய பகுதி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு கும்பல் காதல் ஜோடிகளை குறிவைத்து ஒரு கும்பல் தொடர்ச்சியாக வழிப்பறியில் ஈடுபட்டது தொடர்பாக தாடிக்கொம்பு மற்றும் தாலுகா காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது குறித்து எஸ் பி பிரதீப் உத்தரவின் பேரில் புறநகர் டிஎஸ்பி. உதயகுமார் மேற்பார்வையில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் அருண்நாராயணன் பிரபாகரன் மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படையினர் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட திண்டுக்கல்லை சேர்ந்த பிரேம்குமார்(31), செந்தூரப்பாண்டியன்(27), சிவசக்தி(37) ஷேக் பரீத்(29) ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 15 1/2 பவுன் தங்க நகை, 2 டூவீலர்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்