காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் பாதிக்கபடும் பொதுமக்கள் கோரிக்கை
காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க நிரந்தர நடவடிக்கை என்ன செய்ய போகிறது வனத்துறை
இயற்கை அன்னையின் ஆட்சியில் அற்புத இடம் நீலகிரி.பசுமையான வனப்பகுதிகள். வளைந்து, நெளிந்து செல்லும் மலைப்பாதை. மலைமுகடுகளை மோதி செல்லும் மேகக்கூட்டங்கள் பச்சை புல்வெளிகள் என இயற்கை எழில் அழகை மொத்தமாக தன்னகத்தே கொண்டு உள்ளது
நீலகிரி சுற்றுலா பயணிகளை கவர்ந்து வந்தாலும், மறுபுறம் வனவிலங்குகளால் மக்களுக்கு பாதிப்பு தொடர்கதையாகி.உள்ளன.
மேற்கு மலைத்தொடர்ச்சியின் அங்கமாக நீலகிரி மலைப்பிரதேசம் உள்ளது. நீலகிரி மாவட்டம் 60 சதவீதத்துக்கும் மேல் வனப்பகுதிகளை கொண்டு இருக்கிறது
. இங்கு காட்டு யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. அவை உணவு மற்றும் தண்ணீர் தேடி இடம்பெயர்ந்து ஊருக்குள் புகுந்து வருகின்றன. அந்த சமயங்களில் மனித-வனவிலங்கு மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனால் உயிரிழப்பு சம்பவங்களும் நடந்து வருகிறது.
கூடலூர் பகுதியில் காட்டு யானைகள், புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் தாக்குதல் அடிக்கடி காணப்படுகிறது.
முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் கூடலூர் வன கோட்டத்தில் அடர்ந்த வனப்பகுதி இருந்தாலும், மனித-வனவிலங்கு மோதல்கள் அதிகரித்து வருகிறது.
கூடலூர் அருகே ஓவேலி, பாடந்தொரை, ஸ்ரீ மதுரை, சேரங்கோடு உள்பட பல இடங்களில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து குடியிருப்புகள், விளைநிலங்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
இதனால் கூடலூர், பந்தலூர் தாலுகாக்கள் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக போராட்டங்கள்பல நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் இன்று 4வது மைல் பகுதியில் குவிந்த பொதுமக்கள்.
காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்தனர்
வனத்துறை அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்
இதனால் 4வது மைல் பகுதியில் பெரும் பரபரப்பு காணப்படுகிறது