வாணியம்பாடி,ஜூலை.3- திருப்பத்தூர் மாவட்டம்
வாணியம்பாடி அடுத்த பூங்குளம் ஊராட்சிக்குட்பட்ட பலப்பல்நத்தம் பகுதியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
மூதாட்டி மர்ம மரணம் குறித்து சந்தேகத்தின் அடிப்படையில் வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் விஜைகுமார் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் பூங்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த போது, அப்பகுதியில் வெங்கடேசன் என்பவரது வீட்டில், காவல் துறையினர் சோதனை செய்த போது, வனவிலங்குகளை வேட்டையாட வீட்டில் பதுக்கி வைத்திருந்த 3 நாட்டுத்துப்பாக்கிகளை ஆலங்காயம் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் நாட்டு துப்பாக்கியை வீட்டில் பதுக்கி வைத்து தலைமறைவாக உள்ள வெங்கடேசன்(50), பலப்பல்நத்தம் பகுதியை சேர்ந்த குமார்(45) ஆகியோர் மீது ஆலங்காயம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவர்களை வருகின்றனர்.