திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள வரி வசூல் மையத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வரும் திண்டுக்கல் நெட்டுதெரு பகுதியை சேர்ந்த சரவணன். இவர் கடந்த மாதம் 4-ம் தேதி பொதுமக்கள் செலுத்திய வரிப்பணம் ரூ.6 லட்சத்தை கணக்காளரின் கையெழுத்தை போலியாக எழுதி வங்கியில் செலுத்துவதற்காக எடுத்துச் சென்று வங்கியில் ரூ. 4 லட்சம் மட்டும் செலுத்தி விட்டு ரூ. 2 லட்சத்தை கையாடல் செய்து விட்டார்.
இந்நிலையில் கணக்கு பிரிவு அலுவலர்கள் மாதாந்திர ஆய்வு செய்தபோது சரவணன் கையாடல் செய்தது தெரிய வந்தையடுத்து மாநகராட்சி அதிகாரிகளிடம் சரவணன் கையாடல் செய்த ரூ.2 லட்சம் பணத்தை ஒப்படைத்தார்.
இதை அடுத்து அரசு பணத்தை கையாடல் செய்ததற்காக சரவணனை சஸ்பெண்ட் செய்து திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார்