பஞ்சாப் மாநிலம்
ரகசிய தகவலின் பேரில், வனத் துறை மற்றும் மத்திய வன உயிரின கட்டுபாட்டு அதிகாரிகள் , மஜிதா மண்டியில் உள்ள குடோனில் இருந்து ஏராளமான கடத்தப்பட்ட வனவிலங்கு பாகங்கள் மற்றும் மிகவும் அரிதான பவளப்பாறைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
குடோன் உரிமையாளர் சைமர் லுகானி என அடையாளம் காணப்பட்டுள்ளார். அதிகாரிகள் வியாழக்கிழமை அவரது வேலைக்காரன் ராம்செயினை கைது செய்த நிலையில், லுகானி தலைமறைவாக உள்ளார்.
மாவட்ட வன அதிகாரி அம்னீத் சிங் கூறுகையில், “இவ்வளவு பெரிய அளவிலான வனவிலங்கு பாகங்கள் கைப்பற்றப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என கூறியுள்ளார்
வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972-ன் கீழ் இந்த பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது . சந்தேகத்திற்குரிய 38 கரடி பித்த பைகள், 158 உடும்புகளின் பிறப்புறுப்புகள், 1.49 கிலோ குழாய் வடிவ பவளப்பாறைகள், 69 கடல் விசிறிகள், 4.814 கிலோ பவளப்பாறைகள், 400 உறைந்த சாண்ட்ஃபிஷ் தோல்கள் ஆகியவற்றைக் குழு கைப்பற்றியது. மேலும் ஆசியாவில் இருந்து கடத்தப்பட்ட வெளிநாட்டு இனங்கள் சிலவும் கைப்பற்றப்பட்டுள்ளன. “துரதிர்ஷ்டவசமாக, இவை அனைத்தும் மூடநம்பிக்கைகளில் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், அவை இந்தியாவிற்குள் கடத்தப்படுகின்றன” என்று அதிகாரிகள் கூறினர்.